Tuesday 25 November 2014

அறிவுரை

லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டு கொஞ்சம் சாங்ஸ் டவுன்லோட் பண்ணிட்டு இருந்தேன். தர்ஷினி ஸ்கூல் பேக் எடுத்துட்டு வந்து ரூம்ல வச்சிட்டு இருந்தா....

”ஸ்கூல் விட்டு வந்து எவ்ளோ நேரம் ஆகுது தர்ஷினி.......இன்னும் ஹோம் வொர்க் எழுத உக்கார மாட்டேங்குற”

“இருங்க சித்தி....கொஞ்ச நேரம் கழிச்சு எழுதுறேன்”

“ஏதாச்சும் காரணம் சொல்லி லேட்டாக்கிட்டே இரு....இன்னைக்கு நடத்துன பாடத்தை இன்னைக்கே படிக்குறது...ஹோம் வொர்க் எழுதுறது எல்லாம் எவ்ளோ நல்ல பழக்கம் தெரியுமா? அப்ப தான் ஸ்கூல்ல பாடம் நடத்தினது மறக்காம ஞாபகத்துல இருக்கும்....பரீட்சைக்கு முன்னால ஒரு தடவை ரிவைஸ் பண்ணாலே போதும்....நல்ல மார்க் வாங்கிடலாம்....இத டெய்லி ஃபாலோ பண்ணாலே........”

“தேவி......”

“என்னம்மா”

“ஃபோன்லயா பேசிட்டு இருக்க?”

“இல்லம்மா தர்ஷினிட்ட பேசிட்டு இருக்கேன்”

“தர்ஷினி வெளிய போய் பத்து நிமிஷம் ஆகுது.....அத கூட கவனிக்காம தனியா பேசிட்டுருக்கியா”

அப்பதான் திரும்பிப் பார்த்தேன்.......தர்ஷினி ரூம்ல இல்ல.....லேப்டாப் பார்த்துட்டே பேசிட்டு இருந்ததால அவ போனதை கவனிக்கல....

நீதி : அறிவுரை சொல்றது தப்பில்ல.....நாம யாருக்கு அறிவுரை சொல்றோமோ அதை சம்பந்தப்பட்ட ஆள் நின்னு கேக்குறாங்களான்னு பார்த்துட்டு அறிவுரை சொல்றது நல்லது.

No comments:

Post a Comment