Thursday 13 November 2014

அமெரிக்கன் எம்பஸி

ஃப்ரெண்ட்சோட செம்மொழிப்பூங்காவுக்கு போயிட்டு திரும்பி வரும் போது ஜெமினி பிரிட்ஜ் பக்கத்துல அமெரிக்கன் எம்பஸிய ஒட்டி நடந்து வரும் போது அந்த ஃபோகஸ் லைட் போஸ்ட்டை மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுத்தேன்.

அடுத்த நிமிஷம் பின்னாடி இருந்து ஒரு சத்தம் .....ஒரு செக்யூரிட்டி நில்லுங்க நில்லுங்கன்னு ஓடி வந்தாரு...கூடவே இன்னொரு செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல இருந்த ஒரு லேடியும் ஓடி வந்து (கையில வயர்லெஸ்லாம் வச்சிருந்தாங்க) எங்களை நிறுத்தினாங்க.

நான் கை ரெண்டையும் மேல் தூக்கச்சொல்லுவாங்களோன்னு யோசிச்சுட்டே இருக்கும் போது என்னைப் பார்த்துஇங்கே ஃபோட்டோவெல்லாம் எடுக்கக்கூடாது....உடனே டெலீட் பண்ணிடுங்க”....

நான்எம்பஸிய ஃபோட்டோ எடுக்கலை மேடம் ...அந்த லைட் போஸ்ட்டத்தான் எடுத்தேன்

எதுவாயிருந்தாலும் ..இங்கே ஃபோட்டோ எடுக்கக்கூடாது ...நீங்களே டெலீட் பண்ணிடுங்க..இல்லைன்னா ஃபார்ம் ஃபில் அப் பண்ண வேண்டியிருக்கும்

நான் என் மொபைல் லாக்கை எடுத்துட்டே சொன்னேன்ஓக்கே மேடம்.....” ...அப்புறம் அப்படியே போயிட்டாங்க (நான் டெலீட் பண்ணிட்டேன்னு நெனைச்சுட்டாங்க போல) ....நான் என்னோட டப்பா மொபைல்ல லாக் எடுத்துட்டு அந்த ஃபோட்டோவை பார்த்தேன் ...வெளிச்சத்துல ஒண்ணுமே தெரியல...எதுக்கு ஃபோட்டோ எடுக்கக்கூடாதுன்னு சொன்னாங்கன்னும் தெரியல...

என் ஃப்ரெண்டுஅவங்க ஃபார்ம் ஃபில் அப் பண்ணனும்னு சொன்னதும் பயந்துட்டீல்ல

நான்யேய் ..அதெல்லாம் ஒண்ணுமில்ல...உனக்கே தெரியும் ...கஷ்டமோ நஷ்டமோ எதுவாயிருந்தாலும் அது இந்த தாய் மண்ணுல தான் ...எனக்கு வெளிநாட்டுக்குப் போற நெனைப்பே இல்ல...அதுவும் போயும் போயும் அமெரிக்காவுக்கா .....நெவர் ... ஹேட் அமெரிக்கா

உடனே அவ...”அய்யே..இந்த மூஞ்சியத்தான் அமெரிக்காவுக்கு கூப்பிடுறாங்களாகும் ...அவங்க உன்னைய உள்ள தூக்கி வைக்கத்தான் ஃபார்ம் ஃபில் அப் பண்ணனும்னு சொன்னாங்க


அவ்வ்வ்வ் .....இதுக்கெல்லாம் கூட நாமளே தான் ஃபார்ம் ஃபில் அப் பண்ணனுமா ??/????

No comments:

Post a Comment