Tuesday 25 November 2014

சின்னவளே


வழக்கமா வீட்டுக்கு வரும் பழங்கள் விற்கிற அம்மாவிடம் கால் கிலோ திராட்சை பழம் வாங்கினாங்க எங்கம்மா....

“ஏம்மா...கால் கிலோ போதுமா...நல்லா இனிப்பா இருக்கும்மா”

“இல்லம்மா....இதுவே போதும்...சின்னவ மட்டும் தான் விரும்பி சாப்பிடுவா”

“சரிம்மா”ன்னுட்டு போய்ட்டாங்க.....

அம்மா சமையல் செஞ்சுட்டு இருக்க...நான் உக்கார்ந்து டீ வி பார்த்துட்டே திராட்சைப் பழத்தை தின்ன ஆரம்பிச்சேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு வந்த அம்மா ”ஏண்டி....எல்லா பழத்தையும் சாப்பிட்டுட்டியா?”

“ஆமா...நீங்க எனக்கு மட்டும் தான வாங்கினீங்க?”

“நான் எப்ப சொன்னேன் உனக்கு மட்டும் வாங்குனேன்னு?”

“ம்மா....சின்னவ மட்டும் தான் விரும்பி சாப்பிடுவான்னு பழக்கார அம்மாட்ட சொன்னீங்கல்ல”

“போடி...இவளே.....சின்னவன்னு கீதாவ சொன்னேன்....உன்னை யாரு சொன்னா?”

“கீதா சின்னவளா?”

“ஆமா..வீட்டுக்கு சின்னப்பிள்ள அவ தான இப்ப...பெரியவ தான் திராட்சையே சாப்பிட மாட்டாளே”

“ஓஹோ.......அப்படீன்னா ...நான்.... ஹேமால்லாம்(என் அக்கா) யாரு ?”

“நீங்க தான் வளர்ந்துட்டீங்களே....இப்பயுமா உங்க ரெண்டு பேரையும் சின்னவ பெரியவன்னு சொல்றது....அடிப் போடி”

பேத்திங்க வந்துட்டா மகள்களையெல்லாம் இந்த அம்மாக்கள் ரெண்டாம் இடத்துக்கு தள்ளிடுறாங்கப்பா

No comments:

Post a Comment