Tuesday 25 November 2014

சாப்பாடு

”என்ன பண்ணிட்டு இருக்க தர்ஷினி”

“சாப்புடுறேன் சித்தி”

“அது தெரியுது எவ்ளோ நேரமா சாப்புடுற?”

“தெரியல சித்தி”

“கொழுப்பா ஒனக்கு.....ஒரு மணிநேரமா உக்கார்ந்து ஒவ்வொரு பருக்கையா எண்ணி எண்ணி சாப்டுட்டு இருக்க”

“.....”

“உங்கூட சாப்பிட உக்கார்ந்த நாங்கல்லாம் எப்பவோ சாப்ட்டு எந்திரிச்சுட்டோம்...நீ இன்னமும் தட்ட வச்சுட்டு உக்கார்ந்துருக்க”

“......”

“நாங்கல்லாம் சின்னப் பிள்ளையா இருக்கும் போது தட்டுல வச்ச சோறு ஆறுறதுக்குள்ள சாப்ட்டுறணும்னு சொல்லித் தாத்தா வையிவாரு...தெரியுமா...நாங்கல்லாம் அப்டி பயந்துட்டே சாப்பிடுவோம்”

“.....”

“நீ என்னடான்னா....டீவிய பார்க்குற ...அடுத்தவங்க தட்ட பார்க்குற....அயிர மீன அரிக்கிற மாதிரி பால் சோத்த அரிஞ்சுட்டுருக்க.....நானும் பார்த்துட்டே இருக்கேன்....”

“ஏன் சித்தி......இவ்ளோ நேரம் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு வேடிக்க பார்த்துட்டு இருந்ததுக்கு பதிலா அப்பவே இதச் சொல்லிருந்தா நானும் சீக்கிரம் சாப்பிட்டு எந்திரிச்சுருப்பேன்ல......”

?????????????????..........

No comments:

Post a Comment