Tuesday 25 November 2014

தாய் சொல்லை தட்டாதே

”ம்மா.....தர்ஷினி சைக்கிள் ஏன் இவ்ளோ தூசியா இருக்கு ....துடைக்கவே மாட்டாளா”

“எத்தனையோ தடவை சொல்லியாச்சு.....அவ கேக்க மாட்டேங்குறா”

“இன்னைக்கு வரட்டும் நான் சொல்றேன்...அதெல்லாம் சொல்ற விதத்துல சொன்னா கேட்டுக்குவா”

“அவ எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்பா...அவளாச்சு...நீயாச்சு”

கொஞ்ச நேரத்துல தர்ஷினி சைக்கிள் எடுக்க வந்தா.....

“ஏண்டி....தெனமும் சைக்கிள்ல தான ஸ்கூலுக்குப் போற...ஒரு நாளாச்சும் அதை துடைச்சு வைக்கக்கூடாதா...பாரு எவ்ளோ தூசியா இருக்கு?”

“போங்க சித்தி....எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல”

“நான்லாம் ஸ்கூல்ல படிக்கும் போது ஞாயித்து கெழம சைக்கிள நல்லா கழுவி துடைச்சு, எண்ணை போட்டு வச்சிருப்பேன்...தினமும் சைக்கிள் எடுக்கும் போது லேசா துடைச்சாலே போதும்....சைக்கிள் புதுசு மாதிரி இருக்கும் தெரியுமா”

“அய்யோ...நானே ஸ்கூலுக்குப் போற அவசரத்துல இருக்கேன்...நீங்க வேற நொய் நொய்ன்னுட்டு......சும்மா தான் இருக்கீங்க நீங்க துடைச்சு வைக்கலாம்ல.....அத விட்டுட்டு...எப்பப்பாரு ஏதாச்சும் சொல்லிட்டு.......

“..................................”
“நான் தான் சொன்னேன்ல அவகிட்ட கேக்காதடின்னு....உனக்கு இது தேவையா”

நீதி : தாய் சொல்லை தட்டாதே

No comments:

Post a Comment