Thursday 13 November 2014

பெருக்கல்

அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். கையில பெருக்குமாறோட (துடைப்பம்) நின்னுட்டு பெரிய மகளை திட்டிட்டு இருந்தா. ”கழுதை வயசாகுது (4ம் வகுப்பு படிக்கிறா) இன்னும் ஒழுங்கா பெருக்கத் தெரியல....எத்தனை தடவை சொல்லிக் குடுக்குறது....எப்பப் பாரு வெளையாட்டு வெளையாட்டு....உன்ன.... இரு இன்னைக்கு வெளுக்குறேன்ன்னு கத்திட்டு இருந்தா. அக்கா பொண்ணு ஒரு மூலையில உக்கார்ந்து அழுதுட்டு இருந்தா.

நான் அக்காகிட்ட இருந்து பெருக்குமாற வாங்கிஇதுக்குப் போயி ஏன்ல பிள்ளைய வஞ்சிட்டு இருக்க? இங்க வா தர்ஷினி ...இந்தா பார்த்தியா இந்த கைப்பிடிய நல்லா பிடிச்சுக்கிட்டு தரைய அழுத்தமா பெருக்கணும்......ஒரு தரம் பெருக்கிட்டு மறுபடியும் நல்லா பெருக்கிட்டா குப்பையெல்லாம் போயிடும் சரியா

நான் பேசிட்டு இருக்கும் போதே என் அக்கா பொண்ணு அழுறத விட்டுட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா ......என் அக்காவும் சிரிச்சுக்கிட்டேஏல....லூசு நான் அவ கணக்கு பாடத்துல பெருக்கல் எல்லாம் தப்பு தப்பா போட்டுருக்கான்னு வஞ்சுட்டு இருந்தா நீ பெருக்குமாற பிடிச்சி வீடு கூட்டுறதப் பத்தி சொல்லித் தந்துட்டு இருக்க

(அடச்சே) “சரி சரி விடு......அதான் அழுத பிள்ள சிரிச்சிருச்சுல்லவா தர்ஷினி சித்தி கணக்கு சொல்லித்தரேன்



வேணாம் சித்தி........அம்மாவே சொல்லித் தரட்டும்’’

1 comment:

  1. உங்க ஊர்ல பெருக்குமாறா..... எங்க ஊர்ல விளக்குமாறு னு சொல்லுவோம்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete