Friday 18 April 2014

மாயக்கரம்



மயிரிழையில் தப்பிப் பிழைத்த
எதிர்பாரா விபத்தொன்றை
நினைவூட்டிச் செல்கிறது
பின்னிரவுக் கனவொன்று
வீரிட்டெழும் குழந்தை போல்
பதைபதைக்கும் மனதை
மெல்ல அணைத்து
தட்டிக் கொடுக்கிறேன்
உறங்கிட்ட மனதை
தூளியிலிடுகையில்
விழி நீர் துடைக்க 
விரல்களை நீட்டுதொரு மாயக்கரம்
இறுகப் பற்றிக் கொண்டு
ஒடுங்கிக் கரை சேர்ந்த பின்
முகம் பார்க்க நிமிர்கிறேன்
புன்னகை பூத்திருக்கும்
முகச்சாயல் யாரையோ ஒத்திருக்க
நினைவுக் குவியலைக் கிளறிய நொடியில்
முகத்தோடு மறைந்தது மாயக்கரம்