Tuesday 25 November 2014

அந்த நாள் ஞாபகம்

அந்த நாள் ஞாபகம் 

ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு ஜேசுதாஸ் பாடின ஒரு பாட்டு கேட்டேன்....”ஆராரிரோ பாடியதாரோ” .....படம் ”தாய்க்கொரு தாலாட்டுன்னு நெனைக்கிறேன்.........வெறும் பாட்டா அது...ஆகா....பல ஞாபகங்கள் இன்னைக்கு வந்து அப்டியே மனசு கொஞ்சம் லேசாகிடுச்சு.....

பாலிடெக்னிக்கில் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது க்ளாஸ்ல கடைசி பென்ச்சுக்கு முந்தின பென்ச் தான் என்னோட இடம்....பெயர் வரிசைப்படி உக்கார வச்சிருந்தாங்க...என் பக்கத்துல இருக்கும் பெண்ணோட பேரு சத்யப்பிரியா....மேத்ஸ், பிஸிக்ஸ், ஹெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர்னு எந்த க்ளாஸ்னாலும் எல்லாத்தையும் மறந்து தூங்கிடுவா அந்தப் பொண்ணு.......சரியா தூக்கம் வரலேன்னா என்னைய பாடச் சொல்லுவா....அவ தூங்கிக்கிட்டே பாடத்தை கவனிக்க மாட்டா....என் பாட்டுக்கும் ஒரு ரசிகை இருக்காளேன்னு மெய் மறந்து பாடிக்கிட்டே நான் பாடத்தை கவனிக்க மாட்டேன்....அவ தூங்குறது மட்டுமில்லாம பக்கத்து வரிசைல இருக்க பசங்களும் சில நேரம் தூங்கிடுவானுங்க.....(என் பாட்டுல மயங்கி !!!!!!!!)

சத்யப்பிரியாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு “ஆராரிரோ பாடியதாரோ...தூங்கிப் போனதாரோ...யாரோ...யாரோ...எனக்காரோ...யாரோ...என் தெய்வமே...இது பொய்த் தூக்கமா....நான் தூங்கவே இனி நாளாகுமா”ன்னு அப்டியே உருகி உருகி ஜேசுதாஸ் பாடியிருப்பாரு.....சோகப் பாட்டுன்னாலும் ”சிச்சுவேஷன்” சாங்குன்றதால அந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்......

எங்க பிஸிக்ஸ் வாத்தியாரு ரொம்ப முசுடு...பாடம் நடத்திட்டு இருக்கும் போதே திடீர்னு “ எல வெளங்குது...வெளங்கல”ன்னு கேப்பாரு....அதாவது புரியுதா /புரியலையான்னு கேப்பாரு......வெளங்கலைன்னாலும் அவரு அப்டித்தான் பாடம் நடத்துவாரு......

ஒருநாள் நான் பாடிட்டு இருக்கும் போது அவர் பாடம் நடத்திட்டு இருந்தாரு.....”என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு...ஒரு பார்வ பாருன்னு” பாடிட்டுருக்கும் போது “எல வெளங்குது .......வெளங்கல”ன்னு அவர் கேட்க பாட்டு டிஸ்டர்ப் ஆன எரிச்சல்ல “வெளங்கிரும்னு போ” நான் மெதுவா(!!!!) சொல்ல அரைத் தூக்கத்துல இருந்த சத்யபிரியாவோட சேர்ந்து பக்கத்து வரிசை பயலுகளும் சிரிச்சுட்டானுங்க.....

வாத்தி உசாராகிட்டாரு....”எல யாரு அங்க சிரிச்சது” ஒருத்தரும் மூச்சு விடல.....”இப்ப நீயா சொல்றியா...இல்ல நான் வரவாலே.....” சொல்லிக்கிட்டே ரெண்டு வரிசை பென்ச்சுக்கும் நடுவில வந்து நின்னவரு “இப்ப யாரு சிரிச்சான்னு சொல்லல....எல்லாரையும் வெளிய அனுப்பிருவேன் ”னு மெரட்டுனாரு. நான் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே...

ஓரக்கண்ணால நான் பார்க்கும் போது “எனக்குத் தெரியும்ல யாருன்னு.....நானா பேர் சொல்றதுக்கு முன்னாடி நீயா சொல்லிட்டா நல்லது”ன்னு என்னமோ இவரு தான் துப்பறியும் சாம்பு மாதிரி ரெண்டு கையையும் இடுப்பில வச்சுட்டு (அவரு இடுப்புல தான்யா) நின்னாரு.....அவர் கிட்ட ஒருத்தர் மாட்டினா அவ்ளோ தான்...மனுசன் ஒவ்வொரு கிளாஸ்லயும் லேப்லயும் சாவடிப்பாரு.....
எல்லாம் தெரிஞ்சு என்ன பிரயோசனம்? இப்ப இருக்க தெளிவு (???) அப்ப இல்லயே.....கடைசி பென்ச் பசங்களையும் பொண்ணுங்களையும் தனியா கூப்பிட்டு விசாரிச்சதுல அது நான் தான்னு அவருக்கு தெரிஞ்சு போச்சு.......(அதுலயும் ஒரு சின்ன ஆறுதல்...பசங்க என்னைக் காட்டிக் குடுக்கல...பொண்ணுங்க தான் சொல்லிருக்காங்க )

அப்புறம்........அப்புறமென்ன...ஃபர்ஸ் இயர்ல வச்ச பிஸிக்ஸ் அரியர நான் லாஸ்ட் இயர்ல தான் க்ளியர் பண்ணேன்...

அப்பவே என்னை சுதந்திரமா பாட விட்டிருந்தா இப்போ ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வாய்ஸ் எக்ஸ்பெர்ட்டா இருக்க அனந்த் சார் இடத்துல நான் இருந்திருப்பேன்.....ஹும்ம்ம்

No comments:

Post a Comment