Tuesday 25 November 2014

கருப்புக் கண்ணாடி


புதுப்பேட்டைல இருக்க என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு நேத்து போக வேண்டி இருந்தது. ஆஃபீசுல இருந்து ஆட்டோ பிடிச்சு போயிட்டு இருந்தேன்.

கண்ணுல தூசி படக்கூடாதுன்னு கண்ணாடி போட்டுருந்தேன். ராமச்சந்திரா டயாபடீஸ் ஹாஸ்பிட்டல் தாண்டி ஆட்டோ போய்ட்டு இருக்கும் போது டிரைவர் கிட்ட ரைட் சைடு திரும்பணும்னு சொன்னேன். இந்த ரைட்டான்னு அவரு கேட்டாரு. 



நான் மொபைல் பார்த்துகிட்டே நிமிர்ந்து பார்க்காம ஆமா இந்த ரைட்டு தான்னு சொல்லிட்டேன். ரெண்டு நிமிஷத்துல ஆட்டோ சடன் ப்ரேக் போட்டு நின்னுச்சு. அதுக்குள்ள வீடு வந்துருச்சான்னு பார்த்தா ஆட்டோ ”எக்மோர் ஐ ஹாஸ்பிட்டல்” வாசல்ல நிக்குது.

”என்னண்ணே இங்கே நிறுத்திட்டீங்க”ன்னு கேட்டேன். ”நீ தானம்மா ரைட் சைடு போகணும்னு சொன்ன”.

”இல்லண்ணே அடுத்த ரைட்டுல போகணும்”னு சொன்னேன்.

”சாரிம்மா கருப்பு கலர் கண்ணாடி போட்டுருக்கவும் கண் ஆஸ்பத்திரிக்கு தான் போறீங்கன்னு நெனச்சு நிறுத்திட்டேன்”

“என்னது??? கண் ஆஸ்பத்திரிக்கா ??அண்ணே இது கூலிங்கிளாஸ்”

“அப்படியாம்மா நான் கூட கண் ஆப்ரேஷன் பண்ணி கருப்பு கண்ணாடி போட்டுருக்கீங்கன்னு நெனைச்சேன்”

கருப்பு கண்ணாடி போட்டா ஹன்சிகா மாதிரி இருக்கும்னு பார்த்தா ....என்னைய கண் ஆஸ்பத்திரி பேஷண்ட் ஆக்கிட்டாய்ங்களே

1 comment: