Thursday 13 November 2014

கண்ணாடி

அம்மாவுக்கு கண் டெஸ்ட் பண்ணிட்டு கண்ணாடி போடச் சொல்லியிருந்ததால பக்கத்துல இருந்த ஆப்டிகல்ஸுக்கு போயிருந்தோம்....எல்லா விதமான ஃப்ரேமும் எடுத்துக் காட்டினாரு கடைக்காரர்....அம்மா ஒவ்வொண்ணா போட்டுப்பார்த்துட்டு இருந்தாங்க....எனக்கும் கூட கண்ணாடி போடச் சொல்லியிருக்கதால நானும் சும்மா இல்லாம......ஒண்ணு ரெண்டு கண்ணாடிய எடுத்துப் போட்டுப் பார்த்துட்டு இருந்தேன்.....

டேபிள் மேல இருந்த ஒரு கண்ணாடிய  எடுத்துப் போட்டுப் பார்த்தேன். என் முகத்துக்கு ரொம்ப சுமாரா இருந்தது அந்தக் கண்ணாடி.....(கடைக்காரப்பையன் என்னைப் பார்த்து கமுக்கமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு இருந்தான்)

இந்த கண்ணாடில இருக்க லென்ஸ் ப்ளாஸ்டிக்கா இல்ல கிளாஸா சார்?”

அது ஃபைபர் மேடம்

ம்ம்....இந்த ஃப்ரேம் ரொம்ப மெல்லிசா இருக்கே ...வளைஞ்சிராதா?”

இல்ல மேடம்...அது மெட்டாலிக்....கொஞ்சம் ஃப்ளெக்சிபிளா இருக்கும்...வெயிட் லெஸ்ஸா இருக்கும்

ஆனா இது கொஞ்சம் பழசா இருக்க மாதிரி தெரியுதே

ஆமா மேடம்....போட்டு 8 மாசத்துக்கு மேல ஆகுது....அது என்னோட கண்ணாடி

(அடச்சே.......அவரோட கண்ணாடிய எடுத்துப் பார்த்து தான் இவ்ளோ டவுட்டு கேட்டுட்டு இருந்துருக்கோமா......)

இருந்தாலும் சமாளிப்போம்ல....”ஹி ஹி . ஏன்சார் கண்ணாடிக் கடையே வச்சிருக்கீங்க....புது ஃப்ரேம் வாங்கிப் போடலாம்ல


அம்மாக்கு கண்ணாடி செலக்ட் பண்ணி அட்வான்சும் குடுத்துட்டு கடைய விட்டுக் கெளம்புற வரைக்கும் பய புள்ள ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டே இருந்திச்சு....

1 comment:

  1. ஹ ஹஹா ...இதுக்குதான் கைய வச்சுட்டு சும்மா இருக்கணும்னு சொல்லுறது ....

    ReplyDelete