Thursday 13 November 2014

ஹேர் டை

தலைவலி தாங்க முடியலைன்னு டீ குடிக்கப் போனேன். அங்கே வந்த ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தர் கேட்டாரு...”என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்க” 

ஒண்ணுமில்ல சார்..கொஞ்சம் தலை வலி.....அதான்

அப்படியா.....சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க .....இதெல்லாம் ஆரம்பத்துலேயே பார்த்துருங்க...லேசான தலைவலி, மைக்ரேன் அது இதுன்னு கடைசியில ப்ரைன் ட்யூமர்ல போயி முடிஞ்சுடும் ....எங்க சொந்தக்காரப் பொண்ணுக்கு இப்படித்தான் ஆச்சு”.

..அப்படியா....சரி சார்

சார்.....நீங்க டை அடிச்சிருக்கீங்க தான

அவர் கொஞ்சம் தயங்கிஆமா மேடம் ....தெரியுதா என்ன.”

இல்ல....சாதாரணமா பார்த்தா தெரியாது .....எங்க பக்கத்து வீட்டு அங்கிள் டை அடிப்பாரு ...அதனால நான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். நல்ல மனுசன்...பாவம் இந்த டை அடிச்சதால கேன்சர் வந்து செத்துப்போயிட்டாருன்னு பேசிக்கிட்டாங்க

என்னது டை அடிச்சா கேன்சர் வருமா?”

அது தெரியாது சார் ...ஆனா அவரு அப்படி கேன்சர் வந்து தான் செத்துப்போயிட்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க

என்ன டை யூஸ் பண்ணாருன்னு தெரியுமா ? கோத்ரேஜ்ஜா இல்ல கார்னியரா?”

அதெல்லாம் தெரியாது சார்.......அவர் தான் செத்துப் போயிட்டாரே

அப்புறம் அவர் எதுவும் பேசல ...

எனக்கு தலைவலி போயே போச்சு..

No comments:

Post a Comment