Tuesday 25 November 2014

கத்தரிக்காய் புளிக்குழம்பு

எனக்கு கத்தரிக்காய் புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும்னு நேத்து சாப்பிடும் போது எங்க ஆஃபிஸ் ஸ்டாஃப் கிட்ட சொல்லிட்டேன்......

இன்னைக்கு அவங்க வீட்டுல இருந்து கத்தரிக்காய் புளிக்குழம்பு எடுத்துட்டு வந்து என்னை சாப்பிடச் சொன்னாங்க .... ஆனா இன்னைக்கு என் வீட்டுலயும் அதே குழம்பு தான் ... அதனால வேண்டாம்னு சொன்னேன் ....அவங்க விடல ....கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சாங்க ....

நானும் சாப்பிட்டுட்டு ”நல்லா இருக்கு மேடம் ரொம்ப தேங்க்ஸ் ... எனக்காக செஞ்சு கொண்டு வந்துருக்கீங்க”னு சொன்னேன் .....

அதுக்கு அவங்க...”பராவாயில்லம்மா ....நாலு நாளா ஃப்ரிஜ்லயே இருக்குன்னு எங்க மாமியார் திட்டிட்டு இருந்தாங்க ....அதான் எடுத்துட்டு வந்தேன்..... நல்ல வேளை நீ சாப்பிட்டு காலி பண்ணீட்ட” 

“என்னது நாலு நாளா .... ஃப்ரிஜ்ல இருந்திச்சா ?????/

“ஹேய் ... புளிக்குழம்பு ஃப்ரிஜ்ல வைக்கலேன்னா கூட நல்லாத் தான் இருக்கும்.... டோண்ட் வொரி”ன்னுட்டு போய்ட்டாங்க

1 comment: