Tuesday 25 November 2014

இஞ்சி பூண்டு பேஸ்ட்

”தேவி பக்கத்து கடைக்குப் போய் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கிட்டு வா”

“ம்மா நான் என்ன சின்னப் பிள்ளையா....இன்னும் என்னைய கடைக்குப் போகச் சொல்றீங்க. தர்ஷினிய போகச் சொல்லுங்க”

“தர்ஷினி”

“என்ன ஆச்சீ.....கொஞ்ச நேரம் டீ வி பார்க்க விட மாட்டேங்குறீங்க”

”கடைக்குப் போய் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கிட்டு வாடி”

“போங்க ஆச்சி..எப்பப் பாரு ஏதாச்சும் வேலை சொல்லிட்டு”
வேடிக்கை பார்த்துட்டு இருந்த எங்க வீட்டுப் பொடுசு கீதாஸ்ரீ.....
.
“ஆச்சீ என்ன பேஸ்ட் ஆச்சி....நான் போய் வாங்கிட்டு வரேன்”

“இஞ்சி வெள்ளைப்பூண்டு பேஸ்ட் டா செல்லம்”

“இப்டி ஒரு பேஸ்ட்டா”

“ஆமா...அண்ணாச்சிகிட்ட சொல்லு எடுத்து தருவாங்க”

“ம்ம் சரி”

“என்னடி இவ....போய் பத்து நிமிஷம் ஆச்சு...இன்னும் காணோம்”

“ஆச்சி இந்தாங்க”ன்னு ஒரு கேரி பேக்கோட வந்தா.....

“அடக்கடவுளே ....இவ என்ன வாங்கிட்டு வந்திருக்கா பாரு”

ஒரு பெரிய சைஸ் இஞ்சித்துண்டு, ஒரு சின்ன பொட்டலத்துல வெள்ளைப் பூண்டு, ஒரு பத்து ரூவா கோல்கேட் பேஸ்ட்டு !!!!!!!!!

அம்மா கோவம் பாதி சிரிப்பு பாதியா “இது என்னடி பேஸ்ட் வாங்கிட்டு வந்திருக்க?”

“ஆச்சி அவங்க வேற பேஸ்ட் குடுத்தாங்க ....நான் தான் கோல்கேட் குடுங்கன்னு சொன்னேன்”

ஹா ஹா ஹா ஹா
(இஞ்சி+பூண்டு+பேஸ்ட் = இஞ்சி பூண்டு பேஸ்ட்

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கோல்கேட்ல உப்பு தான் இருக்குனு நினைச்சேன்.. இஞ்சி பூண்டு பேஸ்ட் கூட இருக்குதா... சூப்பர்...

    ReplyDelete
  3. சுக்குமி ளகுதி ப்பிலி கதையை ஞாபகப்படுத்துங்கோ...

    ReplyDelete