Thursday 13 November 2014

ஸ்டார்டிங் ட்ரபுள்

மதிய சாப்பாடு ஆஃபீசுக்கு எடுத்துட்டு வரல...சரி பக்கத்துல தான இருக்கு வீட்டுக்குப் போய் சாப்பிடலாம்னு நெனைச்சு கிளம்பினேன். மழை பெய்ய ஆரம்பிச்சது. ஆட்டோல போனா போறதுக்கு வரதுக்கு சேர்த்து 50 ரூவா ஆகிடும். எதுக்கு வெட்டியா செலவு...... ஆஃபீஸ் வண்டிய எடுத்துட்டு போகலாம்னு ஆஃபீஸ் அசிஸ்டெண்ட்கிட்ட ஸ்கூட்டி சாவி வாங்கிக்கிட்டே.....

வண்டில பெட்ரோல் இருக்கா சார்

கொஞ்சம் தான் இருக்கு மேடம்...ரொம்ப தூரம் போக முடியாது....... உங்க வீடு பக்கத்துல தான ......போயிட்டு வரதுக்கு சரியா இருக்கும்

சார்...கரெக்ட்டா சொல்லுங்க...அப்புறம் வண்டி பாதில நின்னுச்சின்னா நான் தள்ளிட்டுல்லாம் வரமாட்டேன்....ஃபோன் பண்ணி வண்டி எங்க நிக்குதுன்னு சொல்லிட்டு நான் லீவு போட்டுருவேன்.பார்த்துக்கோங்க

அதெல்லாம் நிக்காது மேடம்...தைரியமா...எடுத்துட்டு போங்க

ம்ம் சரி...வண்டி கண்டிஷன் ஓக்கே தான.....எதும் மக்கர் பண்ணிடாதே...மழை வேற பெஞ்சுட்டு இருக்கு

புது வண்டி மேடம்...ஆனா பிரேக் பிடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோங்க

சரி...நீங்க கொஞ்சம் பார்க்கிங் வரைக்கும் வந்து வண்டிய.....”

வாட்ச்மேனுக்கு தெரியும் மேடம் ...ஆஃபீஸ் வண்டின்னு சொல்லுங்க......எங்க நிறுத்தியிருக்குன்னு சொல்லுவாரு

அட...அதில்ல சார்...வண்டிய கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணிக் குடுத்துட்டு போங்கன்னு சொல்றேன்

வண்டிய ஸ்டார்ட் பண்ணனுமா?...உங்களுக்கு டிரைவிங் தெரியாதா?”

ஹலோ......லைசென்ஸ் எல்லாம் எடுத்து 5 வருஷம் ஆச்சு சார்...”

சரி அப்போ ஒவ்வொரு தடவையும் எப்படி வண்டி ஓட்டுறீங்க

நான் கடைசியா வண்டி ஓட்டுனதே லைசென்ஸ் எடுக்கப்போன அன்னைக்கு தான்...அதுக்கப்புறம் இன்னைக்கு தான் வண்டி ஓட்டப் போறேன்....”

என்னது ?????????????”

No comments:

Post a Comment