Thursday 18 December 2014

காளி

ஒவ்வொரு காயத்தின் மீது
கூர் தீட்டிப் பார்த்து
கவனமாய் செதுக்கியிருக்கிறேன்
என் வலிகளனைத்தையும்

உன் குருதி பார்க்கத் துடிக்கும்
என் வலியின் நாவினை
கடிவாளமிட்டுச் சற்றே
பொறுத்திருக்கப் பழக்கியிருக்கிறேன்

இன்னும் தீர்ந்துவிடவில்லை
நம் எல்லாக் கணக்குகளும்
தீர்ப்பெழுதா வழக்கொன்றில்
தண்டிக்கப்பட்டவள் நான்

வலி சுமந்தலையும் யட்சிணி
பலி கேட்கிறாள் உன் சிரசை
குரூரம் உறைந்திருக்கும் இதயத்தை
எரித்துச் சாம்பலாக்கி

நரம்புகளறுத்து மாலையாக்கி
கடைசித்துளி உதிரத் திலகமிட்டு
வெற்றிக் களியாடும் பொழுதினில்
மீண்டும் காளியாவேன் நான்......

1 comment:

  1. ஆஹா! அருமை!! புதுக்கவிதை என்கிற பேர்ல நிறைய பேரு கொலையா கொல்லுறாங்க ....ஆன இவர்கள் மத்தியில் உங்கள் கவிதை அற்புதம் ...பாராட்டுக்கள்!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete