பத்து நாள் அம்மா வீட்ல இருந்துட்டு வந்தாலும் கூட பத்தவே மாட்டேங்குது. சிங்கிள் லக்கேஜோட ஊருக்குப் போய் இறங்கிட்டு திரும்ப வரும் போது ஒரு சின்ன சரக்கு ரயில் அளவுக்கு பொருட்களோட நேத்து சென்னைக்கு ரயில் ஏறியாச்சு.
ஊருக்குப் போயி அம்மாவுக்கு எல்லா வேலைகள்லயும் உதவி பண்ணணும்னு நெனைச்சுட்டுப் போனா அங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி எந்திருக்கவே நேரம் பத்தல
“ம்மா அடுத்த தடவ வரும் போது உங்கள ரெஸ்ட்டா உக்கார வச்சு நானே எல்லா வேலையும் பார்க்குறேன்”ன்னு சொன்னதுக்கு “அதெல்லாம் வேணாம்டி....உங்க வீட்ல மாப்பிள்ளைய வேலை வாங்காம நீயும் வேலை செய்யப் பழகு”ன்னு சொல்றாங்க....( இன்னுமாய்யா உதய்ய இந்த உலகம் நம்புது )
ஏழு கழுத வயசானாலும் இன்னமும் ஊருக்குக் கிளம்பும் போது கண்ணு கலங்கத்தான் செய்யுது. சோஃபாவுல கிடந்த கர்ச்சீஃப எடுத்து கண்ணீரத் தொடைச்சுட்டு ஹேண்ட் பேக்ல வச்சிக்கிட்டேன். கீதா மட்டும் ரொம்ப அமைதியா என்னையே பார்த்துட்டு இருந்தா.
ரயில் ஏறிட்டு அம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னதும் கீதா ஃபோன வாங்கி கேட்டா “சித்தி அழுவுறீங்களா?”
“சேச்சே இல்லையே”
“அப்ப ஏன் சோஃபால கிடந்த கர்ச்சீப்ப எடுத்து கண்ண துடைச்சிட்டு ஹேண்ட்பேக்ல வச்சிக்கிட்டீங்க?”
“அதுவா...அது சும்மா”
“அந்த கர்ச்சீஃப்ல தான் நான் மூக்க சிந்திட்டு வச்சிருந்தேன்....வீட்டுக்குப் போனதும் நல்லா துவைச்சிடுங்க”
“அட பிசாசே....முதல்லயே சொல்ல வேண்டியது தானடி”
“ஆங்ங்...நீங்க தான் அழுதுட்டு இருந்தீங்களே”
“மூஞ்சி...சரி சரி இதப் போயி யார்ட்டயும் சொல்லாத என்ன”
“நான் சொல்ல மாட்டேன் சித்தி”
“வெரிகுட்”
“ஆனா ஃபோன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு”
(பின்னாடி ஒரே சிரிப்புச் சத்தம்......)
அட.. ப்ளாக் வேற இருக்கா.. சூப்பர். தொடர்ந்து எழுதுங்கம்மா..
ReplyDeleteகடைசியா துவைச்சீங்களா! உங்க பாணில சொல்லலும்னா அல்லுது போங்க!
ReplyDeleteஎனக்கு இதுபோல இயல்பாக எழுத வருவதில்லை என்பதில் வருத்தமாக உள்ளது.